பாடம் - 5

A03135 நாயக்கர் ஆட்சி

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழகத்தை ஆண்ட நாயக்கர்கள் எவ்வாறு ஆட்சியை நடத்தினார்கள் என்பதை இப்பாடம் விளக்குகிறது.

நாயக்கர் காலத்தில் மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை விளக்குகிறது. மேலும், சமுதாய வாழ்க்கை, சமய நிலை, கல்வி நிலை போன்றவை எவ்வாறு இருந்தன என்பதையும் விளக்குகின்றது.

 

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • நாயக்க மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தை எவ்வாறு பிரித்து ஆண்டு வந்தார்கள் என்பது பற்றிய அறிவினைப் பெறலாம்.
  • நீதிமுறை மற்றும் வரிவிதிப்பு முறைகள் பற்றி அறியலாம்.
  • நாயக்கர் காலத்தில் ஆடவர், மகளிர் ஆகியவர்களின் வாழ்க்கையையும், மக்களின் பழக்க வழக்கங்கள், சமய நிலை, கல்வி நிலை போன்ற அறிவு பூர்வமான செய்திகளையும் அறிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு