இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும்
கருத்துக்களை அறிந்து கொண்டு
பயன்களைப் பெறுவீர்கள்!
- சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய நூல்களின்
அமைப்பையும் சிறப்பையும் அறியலாம்.
- இந்நூல்களின் காலத்தையும், நூலாசிரியரின்
வரலாற்றையும் அறியலாம்.
- சிலப்பதிகாரம் ஒரு குடிமக்கள் காப்பியம்
என்று அறியலாம்.
- இதுவே தமிழகத்தை ஒன்றாகக் கண்டது என
உணரலாம்.
- மணிமேகலை தமிழில் தோன்றிய முதல் சமயச்
சார்பான நூல் என்பதைக் தெரிந்து
கொள்ளலாம்.
- தமிழகத்தில் முன்பு நிலவிய சமயங்கள் - தத்துவங்கள்
இன்னவை என்று இனம்
காணலாம்.
- மணிமேகலை உணர்த்தும் அறச் சிந்தனைகளை
அறியலாம்.
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழர்
பண்பாட்டை அறிய உதவும் பெட்டகங்கள்
என்று
அறிந்து கொள்ளலாம்.
|
|