1.5 தொகுப்புரை

ஆறாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியங்கள் பக்தியைப் பாடுபொருளாகக் கொண்டவை ; சமயம் சார்ந்தவை. சமண, பௌத்த சமயங்களது காப்பிய ஆக்கங்கள் முற்றுப்பெறும் சூழல் உள்ளது. குண்டலகேசி மட்டுமே காப்பிய அமைப்பில் உள்ளது. அறக் கருத்துகளைச் சொல்லும் சிறுசிறு விருத்தநூல்கள் உள்ளன. சைவ, வைணவ இலக்கியங்கள் வித்தாகத் தோற்றம் கொள்ளும் நிலையைக் காண்கிறோம். காரைக்காலம்மையார் போன்றோரின் ஆக்கங்களும், முதலாழ்வார்தம் படைப்புகளும் இந்நூற்றாண்டின் விலைமதிப்பற்ற செல்வங்கள் ஆகும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

இப்பாடத்தில் இடம் பெறும் காப்பிய நூலின் பெயர் யாது?

[விடை]
2.

மனித வாழ்வின் நிலையாமை எங்ஙனம் குண்டலகேசியில் கூறப்பட்டுள்ளது?

[விடை]