பாடம் - 3

A04123 எட்டாம் நூற்றாண்டு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

பல்லவ மன்னர்களின் தீவிரச் சமயப் பற்று, கோயில் பணி, கொடைகள் பற்றிக் கூறுகிறது. சைவம், வைணவம் ஆகிய சமயங்களை ஒட்டிய இலக்கியங்கள் தோன்றியதை விளக்குகிறது. இந்த நூற்றாண்டில் இயற்றப்பட்ட சமய இலக்கியங்களையும் பிற இலக்கியங்களையும் அடையாளம் காட்டுகிறது.

இக்காலத்தில் தோன்றிய சைவ, வைணவ இலக்கியங்கள் எவ்வாறு பிற்காலச் சிற்றிலக்கியங்கள் உருவாவதற்கு அடிப்படையாய் அமைந்தன என்பதை விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

அரசியல், சமய, சமூக மாற்றங்களால் ஏற்பட்ட இலக்கியப் பாடுபொருள் மாற்றங்கள் பற்றி அறிந்து கொள்வீர்கள்.

சைவ இலக்கியங்கள் பல படைக்கப்பட்டதைப் பற்றித் தெரிந்து கொள்வீர்கள்.

பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரின் அரிய படைப்புகள் பற்றி அறிந்து கொள்வீர்கள்.

பெருங்கதை, மேருமந்தர புராணம் போன்ற சமண இலக்கியங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.