A04121 ஆறாம் நூற்றாண்டு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப் பாடம் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய
இலக்கியங்கள் பற்றிய தகவல்களையும், அவற்றின்
உட்பொருளையும், அவற்றின் தோற்றத்துக்கான சூழல்களையும், அரசியல் சமூகப் பின்னணிகளையும் காட்டுகிறது. அக்காலப்
பகுதியில் தோன்றிய சமண, சைவ, வைணவ, பௌத்த
இலக்கியங்களை வரலாற்று அடிப்படையில் விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இப்பாடத்தை நீங்கள் படித்து முடித்தால், கீழ்க்காணும் திறன்களைப் பெறுவீர்கள்.

இறைவனை வழிபடும் வழிபாட்டுப் பாடல்களின் பொருளைப்
புரிந்து கொள்ளலாம்.

சிந்தனை வளமிக்க எளிய கருத்துகள்சாதாரணமானவர்களும்
அறியும்     வகையில் தத்துவம் பொதிந்த மந்திரப்
் பாக்களாகத் தரப்பட்டிருந்தலை அறியலாம்.