2.8 தொகுப்புரை
பதினேழாம் நூற்றாண்டைப்
பொறுத்தவரை தமிழ் மொழி பல வகையிலும் ஏற்றம் கண்டுள்ளது என்றே கூற
வேண்டும். நாயக்க மன்னர்களின் ஆதரவு, செல்வர்கள் மற்றும் வள்ளல்களின்
ஆதரவு, மேனாட்டார் தொண்டு, தஞ்சை மன்னர்கள் ஆதரவு, மடங்களின் ஆதரவு
எனப் பல வகையாலும் புரக்கப் பெற்றவர்கள் படைப்புகளை இயற்றினர். இலக்கணம்,
இலக்கியம், காப்பியம், அகராதி, நிகண்டு, நாட்குறிப்பு, மொழி பெயர்ப்பு,
மருத்துவம், சோதிடம் எனப் பல்துறையிலும் தமிழ் வளர்ச்சியடைந்தது.
ஆனால் பழமையான காப்பியங்களும் சிற்றிலக்கிய வகையும் கூட இக்காலத்தில்
மறையாமல் வளர்ந்தன. சதகம், குறம், மாலை, கோவை, கலம்பகம், அந்தாதி,
திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத் தமிழ் போன்ற சிற்றிலக்கியங்கள் பெரும்புலவர்களாலும்
பல சிற்றிலக்கியப் புலவர்களாலும் பாடப் பெற்றன. கிறித்தவர்களின்
வருகையால் செய்யுளின் தளைகளில் இருந்து விடுபட்ட உரைநடை முதன்முதலில்
தோன்றுகிறது. மொத்தத்தில் பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய்
தமிழ்மொழி இந்த நூற்றாண்டில் திகழ்கிறது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
1. |
குட்டித் தொல்காப்பியம் என்றழைக்கப்படும் நூல் எது? |
விடை |
2. |
இலக்கணக் கொத்து என்ற நூலை இயற்றியவர் யார்?
|
விடை |
3. |
தத்துவ போதகர் என்றழைக்கப்பட்டவர் யார்?
|
விடை |
4. |
தமிழ் அச்சின் தந்தை என்று போற்றப்படுவர் யார்?
|
விடை |
5. |
இந்துக்களின் பழக்கவழக்கங்களும் சடங்குகளும் என்ற நூலை எழுதியவர் யார்?
|
விடை
|
|
|