3.9 தொகுப்புரை
பதினெட்டாம் நூற்றாண்டைப்
பொறுத்தவரை, வைணவர்களும் சைவர்களும் புராணங்கள், சிற்றிலக்கியங்கள்
என்பவற்றையே போற்றினர். மடங்கள் மற்றும் செல்வர்களின் ஆதரவு பெற்றோர்
மரபு போற்றியும், பிறர் விருப்பத்தை நிறைவேற்றவும் நூல்கள் இயற்றினர்.
மராட்டிய, நவாபு மன்னர்கள் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தனர். மருத்துவம்,
அகராதி, நிகண்டு, கீர்த்தனை, மொழிபெயர்ப்பு, தொகை நூல், நாவல், உரைநடை
எனப் பல புதிய வடிவங்கள் தமிழுக்குக் கிடைத்தன. தமிழ் லெக்சிகன்
தொகுக்கப் பெற்றது. தமிழின் பெருமையை உலகறியும்படி ஐரோப்பியரும்
மேனாட்டவரும் செய்தனர். இசுலாமியத் தமிழ் இலக்கியம் தோன்றியது. திருப்புகழின்
தாக்கத்தால் பல நூல்கள் இயற்றப் பெற்றன. ஏற்றம், சிந்து, கும்மி,
ஆனந்தக் களிப்பு போன்ற நாட்டுப்புற வடிவங்கள் ஏற்றம் பெற்றதுடன்
இசுலாமிய, கிறித்தவச் சமயங்களிலும் புராணங்கள், புதிய இலக்கிய வகைகள்
தோன்றின. மொத்தத்தில் பதினெட்டாம் நூற்றாண்டு தமிழ் மறுமலர்ச்சியின்
தொடக்கக் காலம் எனலாம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
1. |
மோகவதைப் பரணி யாரால் இயற்றப்பட்டது? |
விடை |
2. |
சீதக்காதி நொண்டி நாடகம் யாரால் இயற்றப்பட்டது? |
விடை |
3. |
‘சீறத்’ என்ற அரபுச் சொல்லின் பொருள் யாது? |
விடை |
4. |
குட்டித் தொல்காப்பியம் எனப்படும் வீரமாமுனிவரின் நூல் எது? |
விடை |
5. |
தமிழ் அகராதியின் தந்தை எனப்படுபவர் யார்? |
விடை |
6. |
தமிழ் மொழியின் ‘உபநிடதம்’ என்று போற்றப்படுவது எது? |
விடை |
|
|