4.9 தொகுப்புரை
பதினாறாம் நூற்றாண்டின்
தொடக்கத்திலேயே அச்சு இயந்திரங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டாலும்
கி.பி. 1577இல்தான் இந்திய மொழிகளில் முதன்முதலில் தமிழ் எழுத்துகளை
அச்சிடும் முயற்சி நடந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் இந்திய மக்கள்
அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தும் உரிமை பெற்றார்கள். அதற்குமுன் அரசின்
கருவியாகவும் கிறித்துவப் பாதிரிகளின் பயன்பாட்டிற்கும் அச்சுஇயந்திரங்கள்
இருந்தன. தடை நீங்கப் பெற்றபின் முதலில் சமய நூல்கள் அச்சிடப் பெற்றன.
பின்னர் பழைய செய்யுள் இலக்கியம், புதிய செய்யுள் இலக்கியம், உரைநடை
நூல்கள், இதழ்கள் என்பன அச்சிடப் பெற்றன. இதனால் தமிழ்நாட்டில் படிப்போர்
எண்ணிக்கை பெருகியது. பதிப்புக் கலையும் ஆராய்ச்சி நூல்களும் இதனால்
வளர்ந்தன.
மரபு வழிப்பட்ட புராணங்கள்,
சிற்றிலக்கியங்கள் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்ற, இசைநாடகங்கள்,
கீர்த்தனை, சிந்து, கண்ணி என்பன பிற்பகுதியில் தோன்றின. அவதானக் கலை
பரவலாகப் போற்றப்பட்டது. புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என்பன கிறித்துவத்திலும்
இஸ்லாத்திலும் தமிழில் தோன்றின. பத்திரிகைகள், அகராதிகள், ஆராய்ச்சி
நூல்கள் என்பன தமிழின் தரத்தை உயர்த்தின. தமிழ் இலக்கிய வரலாறு எழுத
வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு அடிப்படையாகச் சில முன்னோடி
நூல்களும் எழுந்தன.
இவ்வாறு இலக்கியம், உரை, பதிப்பு, வரலாறு, நாடகம்,
பத்திரிகைகள், சிற்றிலக்கியம், புராணம் என அனைத்துத்
துறைகளிலும் தமிழ் இந்த நூற்றாண்டில் வேகம் கொண்டது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
1 |
பஞ்சதந்திரத்தை முதலில் மொழிபெயர்த்தவர் யார்?
|
விடை |
2 |
எழுதா எழுத்து எனப்படுவது எது?
|
விடை |
3 |
தமிழ்ப் பழமொழிகளை முதலில் திரட்டி வெளியிட்டவர் யார்?
|
விடை |
4 |
நந்தனார் சரித்திரக் கீர்த்தனையை இயற்றியவர் யார்?
|
விடை |
5 |
பெர்சிவல் பாதிரியாருக்குத் தமிழ் கற்பித்தவர் யார்?
|
விடை
|
6 |
தமிழ் உரைநடையின் தந்தை எனப்படுபவர் யார்? |
விடை |
7 |
தமிழ் நாவலின் தந்தை எனப்படுபவர் யார்?
|
விடை
|
|
|