6.0 பாட முன்னுரை
இந்திய நாடு விடுதலை பெற்ற பின், தமிழில் உரைநடை,
சிறுகதை, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு என்ற
துறைகளும் புதிதாக இதழியல், மொழிபெயர்ப்பியல்
போன்றனவும் வளர்ந்தன. புதுக்கவிதையில் ஹைக்கூ
கவிதைகளும், நாடக முயற்சிகளில் பாகவதமேளா, பரீக்ஷா,
வீதி நாடகங்களும் தோன்றின. தமிழ் எழுத்துகளைக்
குறைக்கும் முயற்சியில் எழுத்துச் சீர்திருத்தம் தோன்றியது.
மாணவர்க்கு, அறிஞர்க்கு, ஆய்வாளர்க்கு எனப் பல தரங்களில்
தமிழ் இலக்கிய வரலாறு தோன்றியது. இவை பற்றி இப்பாடம்
தொகுத்துக் கூறுகிறது.
|