1.0 பாட முன்னுரை |
நாம் மனிதர்கள். உலகில் நாம் வாழும் காலம் குறைவானதே. ஆனால் நாம் பேசும் மொழி காலங்காலமாக வாழ்ந்து வருகிறது. நாம் அதைப் பயன்படுத்துகிறோம். மொழி நமக்கு எந்த வகையில் பயன்படுகிறது? பேசப் பயன்படுகிறது. மனித உறவுகள் வலுப்படப் பேச்சு உதவுகிறது. உறவை வலுப்படுத்த உரிய கருவி மொழி ஆகும். அந்த வகையில் கருத்துப் பரிமாற்றக் கருவியாக இருப்பது மொழி என்று கூறலாம். இந்தப் பாடத்தில் மொழியை எப்படி எல்லாம் வகைப்படுத்தலாம் என்பதையும், தமிழ் மொழி எந்த வகைப்பாட்டிற்குள் வரும் என்பதையும் காண்போம். |