1.6 அலுவல் மொழி, ஆட்சி மொழி, இணைப்பு மொழி |
தமிழகத்தில், ‘தமிழ்’ ஆட்சி மொழியாக உள்ளது. தமிழகத்தி்ல் பெரும்பான்மையர் தமிழர். தமிழ் வழியே அரசின் செயல்பாடுகள் அமையும் வண்ணம் தமிழக அரசின் ஆட்சி மொழி தமிழாக உள்ளது. இந்தி மொழியை முதன்மை அலுவல் மொழியாகப் பயன்படுத்தும் இந்திய நடுவண் அரசும், மாநில மொழியைப் பயன்படுத்தும் மாநில அரசும் தங்களுக்கிடையே கருத்துப் பரிமாற்ற மொழியாக ஆங்கிலத்தையும் பயன்படுத்துகின்றன. அவ்வகையில் தமிழகத்தில், தமிழ் - ஆட்சி மொழி ஆங்கிலம் - இணைப்பு மொழி (Link Language) என்ற நிலை உள்ளது. |