தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

மாற்றொலி என்றால் என்ன? சான்று தருக.

தமிழில் க, ச, த, ப எனும் ஒலியன்கள் உள்ளன. அவற்றுக்கென இந்தி மொழியில் உள்ளதுபோல வர்க்க எழுத்துகள் இல்லை. க் என்ற ஒரே ஒலியன் கடல், பங்கு, பகல் ஆகிய சொற்களில், k, g, h என்று தடையொலியாக, ஒலிப்பொலியாக, உரசொலியாக ஒலிக்கக் காணலாம். இப்படி சூழலுக்கு ஏற்பத் திரிபடைந்து ஒலிக்கும் ஒலி மாற்றொலி ஆகும். க் என்பது ஒலியன் k, g, h என்பன மாற்றொலிகள் ஆகும்.


முன்