தமிழகத்தில்
குகைக் கல்வெட்டுகள் காணப்படும்
இடங்கள், அவை எழுதப்பட்டதற்கான
காரணம்,
அவைகளைப் பற்றிய ஆய்வு முயற்சிகள்
ஆகியன
விளக்கப்படுகின்றன.
குகைக் கல்வெட்டுகளின்
மொழி தமிழே என எடுத்துக்
காட்டப்பட்டுள்ளது.
குகைக்
கல்வெட்டுகளின் எழுத்து வடிவம் இந்தியா
முழுவதிலும் வழக்கிலிருந்த பிராமி வடிவமே என எடுத்துக்
காட்டப்பட்டுள்ளது.
குகைக் கல்வெட்டுகளில்
தமிழ்மொழியின் ஒலி
அமைப்பு, சொல் அமைப்பு, தொடர்அமைப்பு ஆகியவை
எவ்வாறு அமைந்துள்ளன என்பது விரிவாக
விளக்கப்பட்டுள்ளது.
|