தொல்காப்பியர் காலத் தமிழில்
ஒலிகள் எவ்வாறு
பாகுபடுத்தப்பட்டிருந்தன என்பதை இப்பாடம் விளக்கிக்
காட்டுகிறது.
ஒலிகளின்
ஒலிப்புமுறை பற்றிய
ஆய்வை
மிகப்பழங்காலத்திலேயே தொல்காப்பியர் நிகழ்த்தியிருக்கும்
சிறப்பும், அவர் கூறும் ஒலிப்பு முறைகள் இக்கால மொழியியல்
ஆய்வு உண்மைகளோடு பொருந்திக் காணப்படும் சிறப்பும்
இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன.
எழுத்துகளின்
வரிவடிவம் பற்றிய தொல்காப்பியர் காலக்
கருத்துகள் இப்பாடத்தில் தெளிவுறுத்தப்பட்டுள்ளன.
எழுத்துகள் சொற்களின் முதலிலும் இடையிலும் இறுதியிலும்
வரும் முறை ஒழுங்குகள் பற்றிய
தொல்காப்பியரின்
வரையறைகளை இப்பாடம் எடுத்துக் காட்டுகிறது.
|