2.5 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை பல்லவர் காலத்தில் வழங்கிய தமிழ்மொழி குறித்த செய்திகளை நன்கு அறிந்து கொண்டிருப்பீர்கள்! இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

பல்லவர் காலத் தமிழ் மொழியின் இலக்கண அமைப்பை அறிந்து கொள்ளுவதற்கு முதலில் மூல ஆதாரங்களான அக்காலக் கட்டத்தில் தோன்றிய இலக்கியங்கள், இலக்கணங்கள் ஆகியன பற்றி அறிந்திருப்பீர்கள். அவை பற்றி மட்டுமன்றிப் பிற சான்றுகளான கல்வெட்டுகள், சாசனங்கள் போன்றவற்றையும் நன்கு தெரிந்து கொண்டிருப்பீர்கள்!
பல்லவர் காலத் தமிழின் பெயரியல் அமைப்பில் ஏற்பட்ட சில மாற்றங்களைச் சான்றுகளுடன் உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.
அடுத்து வினையியல் அமைப்பியலும் அதன் வகைகளிலும் உண்டாகியுள்ள பல்லவர் கால மொழி மாற்றங்களைத் தெளிவாக உணர்ந்திருப்பீர்கள்!
மொழி காலத்திற்கேற்ப மாறிவரும் இயல்புடையது என்பதால், பல்லவர் காலத்தில் சொல் வழக்கில் ஏற்பட்ட சில மாற்றங்களையும் சான்றுகளுடன் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
சங்க காலத்திற்குப் பிறகு பல்லவர் காலத்தில் தோன்றிய நிகழ்கால இடைநிலைகள் யாவை?
விடை
2.
துணை வினைகளுக்கு இரு சான்றுகள் தருக.
விடை
3.
திருவாசகத்தில் எதிர்மறை வழக்கின் வேறுபட்ட வடிவத்திற்கு இரு சான்றுகள் தருக.
விடை
4.
சொற்பொருள் மாற்றம் பல்லவர் காலத்திலும் உண்டு என்பதற்குச் சான்றுகள் தருக.
விடை
5.
‘செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்திற்குச் சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட வல்லெழுத்து எது? பல்லவர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வல்லெழுத்து எது? சான்றுகள் தருக.
விடை