இந்தப் பாடம் சோழர் காலத் தமிழ்மொழியில்
எழுத்தியலில் ஏற்பட்ட சில மாற்றங்களைக் கூறுவதாக
அமைந்துள்ளது. தமிழில் ஏற்பட்ட ஒலி மாற்றங்களையும்
தமிழ் எழுத்துகள் குறித்த சோழர் கால இலக்கண நூல்களின்
கருத்தையும் விளக்கிக் கூறுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால்
என்ன பயன் பெறலாம்?
இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள்
கீழ்க்காணும் கருத்துகளை அறிந்து கொள்வீர்கள்.
•
சோழர் காலத் தமிழில் வழங்கிய உயிரெழுத்துகளையும்
உயிரொலி குறித்த மாற்றங்களையும் சான்றுகளுடன்
நன்கு உணர்ந்து கொள்ள இயலும்.
•
சோழர் காலத் தமிழில் மெய்யெழுத்துகள் பெறுமிடத்தையும்
மெய்யொலி மாற்றங்களையும் பற்றி இலக்கியங்கள்,
கல்வெட்டுகள் போன்ற ஆதாரம் கொண்டு உணர்ந்து கொள்ளலாம்.
•
சோழர் காலத் தமிழை அறிய உதவும் இலக்கிய,
இலக்கண நூல்கள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளலாம்.