4.4 சொல்லாட்சி
விசயாலயன் பரம்பரையைச் சார்ந்த பிற்காலச் சோழர்கள்
காலத்தில் வடமொழியின் தாக்கத்தால் தமிழ்ச் சொல்லும்
வடமொழிச் சொல்லும் கலந்த மணிப்பிரவாளம் என்ற நடை
ஒன்று உருவாயிற்று. கம்பர், சேக்கிழார் போன்ற
பெரும்புலவர்கள் வடமொழிச் செல்வாக்கிற்கு அதிகம்
ஆட்படாவிட்டாலும் சொற்களஞ்சியத்தில் ஏற்பட்ட வட
மொழியின் செல்வாக்கை அவர்களால் தடுத்து நிறுத்த
இயலவில்லை என்றே கூறவேண்டும். அதற்கு முக்கியக் காரணம்
அரசியலும் சமூகமுமே. வடமொழி அரசர்களாலேயே
ஆதரிக்கப்பட்ட காலமாக மாறியது அக்காலம். வீரசோழியம்,
நன்னூல் போன்ற இலக்கண நூல்களைப் படைத்த ஆசிரியர்கள்
வடமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்யும் முறையை
உணர்த்துவதிலிருந்து, வடமொழிச் சொற்கள் மிகுதியாகச் சோழர்
காலத்தில் பயன்படுத்தப் பட்டமை நன்கு தெளிவாகிறது.
தற்பவம், தற்சமம் என இருவழிகளில் வடமொழிச் சொற்கள்
தமிழில் இடம் பெற்றன.
சான்று:
தற்பவம்: |
இடபம், விடபம்
நாகம், மேகம்
தலம், தனம்
சபை, சேனை
அரன், அரி
மோகம், மகி
பக்கம், தக்கணம்
சுகி, போகி, சுத்தி
செபம், ஞானம்
|
|
தற்சமம்: |
அமலம், கமலம், குங்குமம்
சுகி, போகி, சுத்தி
|
|
தற்பவம்
= |
வடமொழிக்கே உரிய சிறப்பு எழுத்தாலும்; சிறப்பு,
பொது இருவகை எழுத்தாலும் அமைந்து,
தமிழுக்கு ஏற்ப மாறுபட்டு (விகாரம் அடைந்து)
தமிழில் வழங்கும் வடசொல்.
|
|
வடமொழிக்கும் தமிழுக்கும் பொதுவான
எழுத்துகளால் அமைந்து மாறுபடாமல் (விகாரம் அடையாமல்) தமிழில்
வழங்கும் வடசொல். |
இவ்வடமொழிச் சொற்களேயன்றிச் சிங்களம் (பில்லி,
சூன்யம், முருங்கை), மலாய் (கிட்டங்கி) முதலிய பிறமொழிச்
சொற்களும் அரசியல் வரவால் தமிழில் புகுந்து
நிலைத்துவிட்டன.
|