6.5 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை மராட்டியர் காலத் தமிழ் மொழியைப் பற்றிப் பல கருத்துக்களைத் தெரிந்துகொண்டிருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்!

மராட்டியர் காலத் தமிழை அறிய உதவும் சிற்றிலக்கியங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பட்டயங்கள் போன்றன மூல ஆதாரங்களாக விளங்குவதை அறிந்து கொண்டீர்கள்.
அந்தக் காலக் கட்டத்தில் தமிழ் மொழியில் ஏற்பட்ட உயிர், மெய், ஒலி மாற்றங்களும் அவற்றிற்குக் காரணமாகும் வடமொழித் தாக்கத்தைப் பற்றியும் நன்கு புரிந்து கொண்டிருப்பீர்கள்.
மராட்டியர் காலத் தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் இலக்கணக் கூறுகளின் மாற்றத்தையும், அவை தற்காலத்தோடு பொருந்தியிருக்கும் மொழி அமைப்பையும் விளங்கிக் கொள்ள முடிந்தது.
மராட்டியர் காலத் தமிழில் புகுந்த பிறமொழிச் சொற்களின் ஆதிக்கத்தையும், பேச்சு மொழிச் சொற்கள், இலக்கியங்கள் போன்ற ஆதாரங்களில் செல்வாக்குப் பெற்று விளங்கியமை ஆகிய பல மொழி மாற்றக் காரணிகளையும் நன்கு உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
மராட்டியர் காலத் தமிழில் இடம்பெறும் எதிர்மறை வினையைக் குறிக்கும் இடைநிலைகள் யாவை?
விடை
2.
வினையெச்ச விகுதிகளுக்குச் சான்றுகள் தருக.
விடை
3.
ஸ்வரூபம், ரிஷபம் - இவ்விரு சொற்களைத் தமிழ் வரிவடிவம் கொண்டு எழுதுக.
விடை
4.
தமிழில் புகுந்த உணவு பற்றிய இரு மராட்டிய மொழிச் சொற்களைக் குறிப்பிடுக.
விடை