இலக்கியம்
காலத்தின் - சமுதாயத்தின் - கண்ணாடி
என்றால், அவ்விலக்கியத்தின் நிலைத்த திறத்தினைக்
காலப் பகுப்பின் வழி வகைப்பாடு செய்து தெளிவு பெற
முடியும். இவ்வாறு மனித வாழ்வு
காலத்தின் வழிச்
செயல்படுகிறது என்றால் ஏற்க இயலும்.
இந்திய நாட்டுப்புறவியல்
இந்திய நாட்டுப்புறவியல் வழக்காறுகளை அறிஞர்கள்
1) பண்டைக்காலம் (Ancient Period)
2) தற்காலத்தின் தொடக்கக் காலம் (Early Modern Period)
3) தற்காலம் (Modern Period)
என்று முக்காலங்களாகப் பகுத்து, இந்திய நாட்டு
எல்லைக்குள் உள்ள மாநிலங்களின் படைப்புகளைத்
திறனாய்வு செய்கின்றனர்.
தமிழக நாட்டுப்புறவியல்
இந்திய நாட்டுப்புறவியல் வழக்காறுகளை அறிஞர்கள்
1) சேகரிப்புக் காலம் (1871 - 1959)
2) ஆய்வின் தொடக்கக் காலம் (1960 - 1969)
3) ஆய்வுகளின் வளர்ச்சிக் காலம் (1970)
என்று பகுத்து ஆராய்ச்சி செய்கின்றனர்.
|