நாட்டுப்புறவியல் தொடர்பான கருத்துக்களைப்
பலர்
அறிந்து கொள்ளவும், அக்கருத்துகளை வீச்சுடன் ஆராய்ந்து
தெளிவு
பெறவும் ‘ஆய்வுக் களம்’
என்பது முக்கியமான ஒன்று.
நீண்ட
நெடுங்காலமாக இது போன்ற கருத்தரங்குகள் எல்லாத்
துறைகளிலும்
நடைபெற்று, கருத்தரங்குகளில் விவாதிக்கக்
கூடிய கருத்துகள் நூல்களாக வெளிவருவது மிகவும் பயன்
விளைவிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.
அத்தகைய கருத்தரங்குகளின் முயற்சியே
நாட்டுப்புறவியல் துறையின் வளர்ச்சிக்கு அடிகோலியது. அத்தகைய முயற்சிகள்
இத்துறையில் தற்போது முழு முனைப்புடன் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அவற்றில் குறிப்பாக, தூய சவேரியர் கல்லூரியின் நாட்டுப்புறவியல் துறை, தஞ்சைத்
தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழக
நாட்டுப்புறவியல் துறை போன்றவை பல கருத்தரங்குகளை நடத்தி வருகின்றன. நாட்டுப்புறவியல்
துறையோடு இணைந்துள்ள பல்வேறு துறைகளுடன் தொடர்பு கொண்டு இத்துறையின் வளர்ச்சியில்
அக்கறை காட்டி வருகின்றன.
|