3.0 பாட முன்னுரை

மக்களால் காலங் காலமாக மரபு வழியாக உண்டாக்கப்பட்ட ஆக்கங்கள் (Creations)தான் நாட்டுப்புறவியல் வழக்காறு என்பது. மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இந்த நாட்டுப்புற வழக்காறுகளைப் பகுத்துக் காணும் முயற்சி, அதனைப் பயில்பவர்கள் தெளிவினைப் பெறுவதற்காகத் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.