நாட்டுப்புற இலக்கியத்தை ஒட்டு மொத்தமாகப் படிக்கும்
பொழுது மிகப் பரந்து பட்டதாகத் தோன்றும். எனவே
இவ்விலக்கியத்தை ஏதாவது ஒரு கருத்தியல் (ideology)
அடிப்படையில் பகுத்தும் தொகுத்தும் படிக்கும் பொழுது
சிறப்பாகப் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு இந்தப்
பாடப்பகுதி நாட்டுப்புற இலக்கியத்தை வகைமைப் படுத்தி
விளக்கும் பணியைச் செய்கிறது.