நாட்டுப்புறவியல் என்றால் என்ன என்பதையும் அதன்
வரலாற்றையும் வகைப்பாடுகளையும் முந்தைய பாடங்களில்
படித்தோம். இப்பாடப் பகுதி நாட்டுப்புறவியல் என்ற
துறையானது (discipline) பிற துறைகளோடு குறிப்பாக
மொழியியல் (Linguistics), சமுதாயவியல் (Sociology),
மானுடவியல் (Anthropology), உளவியல் (Psychology),
வரலாற்றியல் (History) போன்றவற்றோடு இணைத்துப்
படிக்கக் கூடிய அளவுக்குத் தரவுகளை உடைய
சிறப்பினைக் கொண்டது என்பதை இப்பாடப் பகுதி
விளக்குகிறது. நாட்டுப்புறவியலின் வளமையையும் சிறப்பையும்
இப்பாடப் பகுதியின் மூலம் கூடுதலாகப் புரிந்து கொள்ள
முடியும். மேலும் நாட்டுப்புறவியல் துறையினை ஒரு
கட்டத்திற்குள் அடக்கி விடாது அடுத்த கட்டத்திற்கு அல்லது
அடுத்த படிநிலைக்கு (next step) எடுத்துச் செல்லும்
சிறப்பினைக் கூறுவதே இப்பாடப் பகுதியாகும்.
|