வாய்மொழிக் கதைப் பாடல் என்பது எழுதப்படாத,
ஆனால் மொழிப்பயன்பாடு மிக்கது. கதைப் பாடல் பாடுபவரது
மொழித் திறனை ‘வாய்பாடு' என்பதன் மூலம் அறியலாம்.
அதாவது ‘வாய்பாடு' என்றால் என்ன என்பதை முந்தைய
பாடப் பகுதியில் பார்த்தோம். அந்த வாய்பாட்டினைப்
பயன்படுத்துவோன் யாப்பு பற்றி எதுவும் அறியாதவன்.
என்றாலும் அவனது பாடலில் யாப்பு அமைதி, ஓசை நயம்
போன்றவை தாமாகவே அமைந்திருக்கும். அவை
அப்பாடலை மனனம் செய்வதற்குப் பயன்படுகின்றன.
பாடல் :
ஒருகளஞ்சு பொன் தருவோம் ஒண்ணுதலே
மருத்துவமே
ரெண்டுகளஞ்சு பொன் தாறோம் நாசகியே வளர என்றாள்
மூணு களஞ்சு பொன் தாறோம் மொய் குழலே மருத்துவமே
. . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . .. . . . . . .
பத்துக்களஞ்சு பொன் தருவோம் பாவையரே மருத்துவமே
இப்பாடலில் மொழித் திறனைப் பார்க்க முடிகிறது.
|