நாட்டுப்புறவியல் பிற துறைகளோடு
இணைத்துப் படிக்கும்
வகையில் அமைந்துள்ள ஒரு பாடப் பகுதியாகும். இவ்வாறு
நாட்டுப்புறவியலை எங்ஙனம் மற்ற துறைகளோடு சேர்த்துப்
படிக்கலாம் என்பதை இப்பாடப் பகுதி எடுத்துக் கூறி
விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்
போது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
நாட்டுப்புறவியல் தனித்துப் படிக்கக் கூடிய பாடம் அல்ல என்பது
புரியும்.
நாட்டுப்புறவியலைப்
பிற துறைகளோடு சேர்த்துக் (Interdisciplinary) கற்கும்
பொழுது பல புதிய தரவுகளையும் புதிய கருத்தியல்களையும் (ideologies)
பெற முடிகிறது.
நாட்டுப்புறவியலின்
வீச்சின் பரப்பு புலப்படுகிறது.
நாட்டுப்புறவியலின் தனித் தன்மைகளையும்,சிறப்புகளையும்
மேலும் புரிந்து கொள்ள இப்பாடப் பகுதி துணை செய்கிறது.