ஆய்வுப் பொருள் தொடர்பாகத்
தொகுக்கப்பட்டுள்ள முதல் நிலைத் தரவுகளோடு பொருந்தியும், துணையாகவும் வரும்
பிற தரவுகள், துணை நிலைத் தரவுகளாகக் கொள்ளப்படும். இத்தரவுகளால்
ஆய்வின் அடித்தளம் விரிவுபடுகின்றது. மூலத் தரவுகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட
தனது ஆய்வின் முடிவுகளைத் துணை நிலைத் தரவுகள் மூலம் ஆய்வாளர் சரிபார்த்துக்
கொள்ள இயலும். அச்சு வடிவில் வெளி வந்துள்ள செய்தி ஏடு, இதழ்கள், ஆய்விதழ்,
வானொலி உரைகள் போன்றவை துணை நிலைத் தரவுகளில் இடம் பெறுகின்றன.
சான்றாக
:
‘தெருக்கூத்து’ பற்றிய ஆய்வில் தெருக்கூத்தைப் பல்வேறு
சூழல்களில் உற்று நோக்கிக் கள ஆய்வில் திரட்டிய தகவல்கள்,
கூத்துக் கலைஞர்கள், பார்வையாளர் போன்றோரிடம்
நிகழ்த்திய
நேர்காணலின் வாயிலாகக் கிடைத்த தகவல்கள்;
கூத்து தொடர்பாக வெளிவந்துள்ள நூல்கள் ஆகியவற்றை
முதல் நிலைத் தரவாகக் கொள்ளலாம். கூத்து, தமிழ் நாடகம்
பற்றி வெளிவந்துள்ள ஆய்வேடுகள், நூல்கள், கட்டுரைகள்
போன்றவற்றைத் துணை நிலைத் தரவாகக் கொள்ளலாம். |