நாட்டுப்புறக் கலைஞர்கள், திருவிழா, தெய்வ வழிபாடுகள்
குறித்து வெளிவரும் செய்திகளை அறிந்து, அவை ஆய்விற்குத் தேவைப்படுமானால், உடனே களப்பணி செய்து
தகவல்களைத் திரட்ட இம்முறை வாய்ப்பு ஏற்படுத்தித்
தருகின்றது. மேலும் நம் ஆய்விற்குத் தேவையான
தகவல்களைப் பத்திரிகைகளின் வாயிலாக விளம்பரம் செய்து
வெளியிட்டு, அதன் மூலம் தகவல்களைச் சேகரிக்கும் வழியும்
இதில் உள்ளது. அச்சிட்டு வெளியிடப்படும் ஏடு, மலர்கள்,
நூல்கள், ஆய்விதழ்கள், வரலாற்றுக் குறிப்புகள்
போன்றவற்றில் இடம்பெறும் செய்திகளைத் தகவல்களாக
மாற்றிக் கொள்ளுதல் ஆகிய பயன்பாடு அச்சுச் சாதனச் வழிச்
சேகரிப்பு முறையில் உள்ளது.
|