பாடம் - 5

A06115 நாட்டுப்புறவியல் - செய்தி சேகரிப்பும் கள ஆய்வும்

 
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

நாட்டுப்புறவியல் வழக்காறு என்பது வாய்மொழி இலக்கியம் ஆகும். இவ்வாய்மொழிப் பாடல்களைப் பாடுவோரிடமும், கலைகளை நிகழ்த்துவோரிடமும் சென்று அவற்றைப் பற்றிய தரவுகளைப் பெறுவது செய்தி சேகரிப்பு, கள ஆய்வு எனப்படும். இவ்விரு செயல்பாடுகளையும் எடுத்துக் கூறி விளக்குவது இப்பாடப் பகுதியாகும்.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

தரவுகளைப் பெறுவதில் உள்ள நடப்பியல் சிக்கல்களைத் (Practical Problems) தெரிந்து கொள்ள முடியும்.
தரவுகளைப் பெறுவதற்காகச் செல்பவர் எத்தகு பண்புகளை உடையவராக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
தரவுகளைத் தொகுத்து வகைப்படுத்தல் எங்ஙனம் என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.
பதிவு செய்தல் என்பது எப்படிப்பட்ட நுணுக்கமான பணி என்பதை அறியலாம்.
நாட்டுப்புறவியல் படைப்பாளிகளின் (Creators) முனைப்பும் தயக்கமும் பற்றி இப்பாடத்தைப் படிப்பதால் அறிய முடிகிறது.
பாட அமைப்பு