6.3 வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடு | |||||||||||||||||||||||||
வாய்பாடு என்பது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சூழலில் தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்தப்படும் சொற்றொடராகும். இவ்வாய்பாடுகள் எல்லாம் ஒரே தன்மையும் பயனும் உடையனவாகும். |
|||||||||||||||||||||||||
6.3.1 வாய்பாட்டுக் கோட்பாடு | |||||||||||||||||||||||||
நாட்டுப்புறவியல் கோட்பாடுகளில் பெரும்பாலானவை ‘பனுவல்’ (text) என்பதை வைத்தே ஆய்வு செய்யப்பட்டன. கதை சொல்பவருக்கோ, பாடல் பாடுபவருக்கோ முக்கியத்துவம் தரப்படவில்லை. முதன் முதலில் இக்கோட்பாட்டில்தான் பாடகருக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தக் கோட்பாடானது பாடகரின் மனத்தில் பாடல் உருவாகும் படிமுறைகளையும் அவர் பாடல் அல்லது காவியத்தை நிகழ்த்துவதற்குப் பயன்படுத்தும் உத்திகளையும் கவனத்தில் கொண்டது. குறிப்பிட்ட பாடகர் வெறுமனே மனப்பாடம் செய்வதன் மூலம் பாடுகிறாரா அல்லது பாடும் போது தாமாகவே உருவாக்குகின்றாரா? என்று அறிவது இக்கோட்பாட்டின் அடிப்படையாகும். இக்கோட்பாட்டை முதன்முதலில் உருவாக்கியவர் மில்மன் பாரி என்பவர் தான். இவர் இலியட், ஒடிசி ஆகிய காப்பியங்களின் வாய்பாட்டு அமைப்புகளை (Formulaic compositon) ஆராய்ந்தார். அதன்பின் 1933 முதல் 1935 வரை யுகோஸ்லேவியப் பகுதியில் வாழும் நாட்டுப்புறப் பாடகர்களின் பாடல்களைச் சேகரித்தார். சேகரித்த பாடல்களைப் புத்தகமாக எழுத ஆரம்பித்து எதிர்பாராத விதமாக அவர் இறந்துவிடவே, அவர் சீடர் ஆல்பர்ட் லார்டு ஆய்வினைத் தொடர்ந்து மேற்கொண்டார். ஆல்பர்ட் லார்டு தம் ஆய்வின் படி வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாட்டைக் கீழ்க்கண்டவாறு வரையறுக்கிறார்.
|
|||||||||||||||||||||||||
6.3.2 வாய்மொழி வாய்பாட்டின் பயன்பாடு | |||||||||||||||||||||||||
சான்று
இந்த உத்தி கதைப் பாடல்களில் மீண்டும் வரல், மாறுபட மீண்டும் வரல், இடை இடையே மீண்டும் வரல் எனக் காணப்படுகின்றது. ஆறான மாசமதில் அரகரா தஞ்சமென்பாள் என்ற பாடலில் தஞ்சமென்பாள் என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் வருகிறது. இவ்வாறு அமைவது ஒரு குறிப்பிட்ட வாய்பாடாகும். இது வாய்மொழி வழக்காற்றில் அமைய, அதனை வாய்மொழி வாய்பாடு என்கின்றனர். |
|||||||||||||||||||||||||
|