பாடம் - 6

A06116 நாட்டுப்புறவியல் கோட்பாடுகள்

 
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

நாட்டுப்புறவியல் வழக்காறுகளை ஆராய்ச்சி செய்த நாட்டுப்புறவியல் அறிஞர்கள் சில கருத்துகளை வரன்முறைப்படுத்தி எடுத்துரைத்துள்ளனர். இத்தகு வரன்முறைகளைக் கோட்பாடுகள் என்று கூறலாம். இக்கோட்பாடுகளை விளக்குவதே நாட்டுப்புறவியல் கோட்பாடு என்ற இப்பாடப் பகுதி.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

நாட்டுப்புறவியல் வழக்காறுகள் எங்ஙனம் ஒரு கட்டமைப்புக்குள் (Structure) அமைந்துள்ளன என்பதை அறியலாம்.
இலக்கியம், கலை என்பனவற்றைப் பற்றிய கூடுதல் விளக்கத்தைக் கோட்பாடுகள் எடுத்துரைக்கின்றன.
ஆய்வு மேற்கொள்வதற்கும், வழக்காற்றினை நன்கு புரிந்து கொள்ளவும் இப்பாடப் பகுதி உதவும்.
கோட்பாட்டு விளக்கம் என்பது நாட்டுப்புற வழக்காற்றின் வளத்தினை, சிறப்பினைக் கூறுவதேயாகும்.
பாட அமைப்பு