.

பாடம் – 2

A06122 வரலாற்றுக் கதைப்பாடல்கள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
E

இந்தப் பாடம் கதைப்பாடல்கள் வகைமையில் ஒன்றான வரலாற்றுக் கதைப்பாடல் பற்றி எடுத்துரைக்கின்றது. அவற்றுள் சிறப்பானதாகவும் முதலிடம் பெற்றதாகவும் அறிஞர்களால் சுட்டப்படும் இரு வரலாற்றுக் கதைப்பாடல்களை அறிமுகப் படுத்துகிறது.

இராமப்பய்யன் அம்மானை, தேசிங்குராசன் கதை என்ற இரு கதைகளின் சுருக்கம் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. கதை இரண்டும் வரலாற்றோடு ஒப்பிடும் பொழுது எந்த அளவிற்கு மாறுபட்டுள்ளன என்பது சுட்டப்பட்டுள்ளது. இக் கதைப் பாடல்கள் வாயிலாக அறியவரும் அக்காலப் பழக்க வழக்கங்கள், மரபுகள், இலக்கிய நயங்கள் ஆகியனவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • கதைப்பாடல் குறிப்பிட்டுள்ள காலக்கட்டத்து அரசியல் நிலையை இப்பாடம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
  • வரலாற்றிலிருந்து கதைப்பாடல் வேறுபட்டுள்ளதா, உண்மை நிகழ்ச்சி திரித்துக் கூறப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
  • அக்காலக்கட்டத்து மக்கள் இடையில் கதைப்பாடல் தலைவன் எவ்வாறு போற்றப்பட்டான், அதற்கு என்ன காரணம் எனத் தெளியலாம்.
  • இலக்கிய உத்திகள் பின்பற்றப்பட்டுள்ளதை அறியலாம். என்னென்ன உத்திகள் பின்பற்றப்பட்டுள்ளன என்பதைக் காணலாம்.
  • அக்காலப் பழக்க வழக்கங்கள், பண்பாடு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு