|
இந்தப் பாடம் சமூகக் கதைப்பாடல் என்றால் என்ன என்பதை வரையறை
செய்கின்றது. இவ் வரையறைக்குள் இடம் பெறும் கதைப்பாடல்களின்
பாடுபொருள் இவை இவை என வகைப்படுத்தி, அவ் வகைப்பாட்டில்
இடம்பெறும் கதைகள் இவை இவை என்பதனைச் சுட்டுவதோடு கதைச்
சுருக்கத்தையும் எடுத்துரைக்கின்றது.
சமூகக்
கதைப்பாடல்கள் தோன்றிய காலச் சூழல் மற்றும் கதைத் தலைவன்
தலைவியர் பற்றிய குறிப்பு, கதை இறுதியில் அவர்கள் அடைந்த
நிலை ஆகியவற்றை விளக்கமாகக் கூறுகிறது. எடுத்துரைத்த கதைப்பாடல்களில்
முத்துப்பட்டன் கதைப்பாடல் சிறப்பு உடையது எனக் குறிப்பிடுகிறது.
அக்கதையையும் அக்கதை மாந்தர்கள் தெய்வமானதையும் எடுத்துரைக்கின்றது.
மேலும்
கதைப்பாடல்கள் வாயிலாக அறியவரும் தமிழ்ச் சமூகத்தின் பழக்கவழக்கங்கள்,
நம்பிக்கைகள் ஆகியவற்றுள் சிலவற்றைச் சுட்டுகிறது.
|