5.0 பாட முன்னுரை

கதைப்பாடல்கள் தலைமுறை தலைமுறையாக மரபு வழியாகப் பாடப்பட்டும் கேட்கப்பட்டும் வருகின்றன. இக்காரணத்தினால் இவை தமக்கென ஒரு பொது அமைப்பு முறையைப் பெற்றுள்ளன. எந்தவோர் இலக்கியப் பிரிவாக இருந்தாலும் அதற்கென ஓர் அமைப்பு முறை இருக்கும். இதற்குக் கதைப்பாடல்கள் மட்டும் விதிவிலக்கல்ல. ஏறக்குறைய இருநூற்று நாற்பதுக்குமேல் கதைப்பாடல்கள் தமிழில் கிடைத்துள்ளன. இக்கதைப்பாடல்களின் அடிப்படையில் அவற்றின் அமைப்பு, மொழிநடை, பயன்பாடு ஆகியவை குறித்து இப்பாடம் எடுத்துரைக்கின்றது.