நாட்டுப்புற இலக்கியங்கள் சமூகத்தைப்
பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகும். குடும்பம், வழக்கம், ஒழுக்கம், மதம்
போன்றவற்றை ஆராய்வதன் வழியாகச் சமூகத்தைப் பற்றி அறியலாம். பாடப் பகுதியாக
உள்ள கதைப்பாடல்கள், பல காலக் கட்டங்களில் எழுந்தவை. அவை வெவ்வேறான
சமூக அமைப்பு முறைகளைக் காட்டுகின்றன. அவற்றைக்கொண்டு தமிழ்ச் சமூகம்,
அதன் பண்பாடு, நாட்டுப்புற மரபுகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
இக்கருத்துகளைக் கதைப்பாடல்களின் துணை கொண்டு இப்பாடம் எடுத்துரைக்க
முற்படுகின்றது.
|