|
இந்தப் பாடம் ‘சமூகம்’ என்றால் என்ன என்று விளக்குகின்றது.
அந்தச் சமூகம் சாதி மற்றும் சமயங்களால் கட்டுண்டு வெவ்வேறாகப்
பிரிந்து கிடப்பதை, கதைப்பாடல் கொண்டு விளக்குகின்றது.
மேலும் அந்தச் சமூகத்தின் பண்பாட்டை அறிய உதவும் பழக்க
வழக்கங்கள், நம்பிக்கைகள் கதைப்பாடலில் இடம் பெற்றுள்ள
தன்மையினை எடுத்துரைக்கின்றது.
நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் பின்பற்றும் மரபுகள் எவை?
அவை பின்பற்றப்படுவதற்குரிய காரணம் என்ன என்பதையும் விளக்கமாகச்
சொல்கின்றது.
|