எஃகு
நகரமாம் சேலத்தில், பொன்விழா ஆண்டை நோக்கி வெற்றிநடை போடும்
புகழ்பெற்ற தியாகராஜர் பல்தொழில் பயிலகத்தின் நிறுவனர்களால்
உருவாக்கப்பட்ட
பொறியியல் கல்வி நிறுவனம் சோனா தொழில் நுட்பக் கல்லூரி.
இங்கு
மாணவர்களுக்குத் தொழில்நுட்பக் கல்வி மட்டுமன்றி வாழ்க்கைக்கு
வேண்டிய
முழுப்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
 நிகழ்ந்து
வரும் காலத்திற்கேற்ப வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறையில்
இந்தியாவின் வல்லமையை உணர்த்தும் வகையில் சோனாகுரூப் கல்வி நிறுவனங்களால்
உருவாக்கப்பட்டதுதான் "சோனாவெர்சிட்டி".
 இந்நிறுவனம்
நாற்பதுக்கும் மேற்பட்ட பொறியியல் பாடங்களுக்கான கணினி வழிப்
பயிற்சியை வழங்குவதற்கென - Audio,
Video, Animation & Text
ஆகியவைகளைக் கொண்ட Computer Based Training CD-ROMகளை
உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் இணையதளங்கள் வடிவமைத்தல்
(Website) மற்றும் இணைய வழிக் கல்விச் சேவை (Online Learning)
ஆகியவற்றிலும் திறம்படச் செயலாற்றிவருகிறது. |