குழந்தைகளைப் பராமரித்து வளர்க்கின்ற சூழலில்
குழந்தைகள்
பாடல்கள் பல நாட்டுப்புறப் பாடல்களாக மக்களிடத்தில்
வழங்கிவருகின்றன. குறிப்பாகத் தாலாட்டுப் பாடல்கள்,
குழந்தைகளின் வளர்கின்ற பல்வேறு நிலையில் பாடுகின்ற
பாடல்கள் ஆகியவை இன்றும் மக்கள் மத்தியில் செல்வாக்குப்
பெற்றுள்ளன.
3.2.1
தாலாட்டுப் பாடல்கள்
குழந்தைகளின் அழுகையை நிறுத்தவும், அவர்களை மகிழ்விக்கவும், தூங்கவைக்கவும்,
பெண்களால் பாடப்படும் பாடல்கள் தாலாட்டுப் பாடல்கள் என்று சுட்டப்படுகிறது.
‘தால்’ என்றால் நாக்கு என்றும் நாக்கினை ஆட்டி ரா ரா ரா ரா, லு லு
லு லு என்று தொடங்கி பாடுவதால் இது தாலாட்டு என்று பெயர் பெற்றது என்றும்
கூறுவர். மக்கள் வழக்கில் ஆராட்டு, ரோராட்டு, தாலாட்டு, ஓராட்டு, தாராட்டு,
தொட்டிப் பாட்டு, தூரிப்பாட்டு என்று தாலாட்டுப் பலவாறாகச் சுட்டப்படுகின்றது.
பாடலின் தொடக்கத்தில் இடம் பெறும் ஒலிக்குறிப்புச் சொற்களை அடிப்படையாகக்
கொண்டு இவ்வாறு சுட்டப்படுகின்றது.
காட்சி
குழந்தையின் தாய்மட்டுமல்லாது குழந்தையின் பாட்டி, அத்தை, சகோதரி போன்ற
உறவினர்களும் தாலாட்டுப் பாடுவர். பெண்கள் இலக்கியமாகத் திகழும் தாலாட்டினை
ஆண்களும் பாடுவதை அருகிக் காணலாம். நெடுங்காலமாக எழுத்திலக்கியப் புலவர்களைக்
கவர்ந்து வந்துள்ள இந்த இலக்கிய வகை எழுத்திலக்கியமாகவும் எழுதப்பட்டுள்ளது.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சிறு சிறு தாலாட்டுப் பாடல் நூல்கள்
வெளிவந்துள்ளன. இத்தகைய பாடல்கள் ஓரளவு படித்தவர்களால் பாடப்படும்
போது அவை மக்களிடையே பரவுகின்றன. எனவே இன்றைய நிலையில் மக்களிடையே
உள்ள நாட்டுப்புறப் பாடல் வகைகளுள் தாலாட்டுப் பாடல்களே எழுத்திலக்கியத்தின்
தாக்கம் மிகுதியாகப் பெற்ற இலக்கியமாகத் திகழ்கின்றது. தாலாட்டுப்
பாடல்கள் அனைத்து சாதி மக்களிடமும் வழக்கத்தில் உள்ளன என்பது இப்பாடல்
வடிவத்தின் சிறப்பாகும். இனி, தாலாட்டுப் பாடல்களுக்கு ஒரு சில சான்றுகள்
காணலாம்.
நாட்டுப்புறப்
பாடல்களுள் தாலாட்டு இலக்கிய வடிவம் பொருண்மையால் சற்று மாறுபட்டுக்
காணப்படும். ஏனைய வடிவங்கள் இயல்பான வாழ்க்கையை எடுத்துக் கூற, தாலாட்டுப்
பாடல்கள் இயல்புக்கு மாறான அதீதக் கற்பனையுடன் அமைந்திருக்கும். குழந்தையைப்
பற்றிய தாயின் எதிர்பார்ப்புகளும், கனவுகளும் இதில் வெளிப்படுவதுண்டு.
சில நேரங்களில் தாய் தன் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வடிகாலாகத்
தாலாட்டுப் பாடல்களைப் பயன்படுத்திக் கொள்கிறாள். குடும்ப உறவுகளுக்கிடையே
அவளுக்குள்ள உறவுகளும் தாலாட்டில் வெளிப்படுவதுண்டு. சான்றாகப் பின்வரும்
தாலாட்டினைக் காணலாம்.
|