(ஸ்திரிபார்ட் வேஷம் - பெண் வேடம், படிக்கச் சொன்னா
திருதிருவென விழிப்பான், வாசியின்னா-படி என்று கூறினால்,
ஓசிப்பான்-(படிப்பதற்கு) யோசிப்பான்)
4.3.2
தகவல் தொடர்பு
நாட்டுப்புறப்பாடல்கள் மிகச் சிறந்த தகவல் தொடர்புச் சாதனமாக இருந்து
வருகிறது. கிராமப்புறப் பகுதிகளில் நிகழும் கொலை, தற்கொலை, தீவிபத்து,
கலவரம், பஞ்சம், புயல் அழிவு போன்ற பல்வேறு நிகழ்வுகள் பாடலாக்கம்
பெற்று வாய்மொழியாகப் பரவி மக்களைச் சென்றடையக் கூடிய போக்கு காணப்படுகிறது.
இத்தகைய பாடல்களில் பல்வேறு வழித்தடங்கள், ஊர்ப் பெயர்கள், புழங்குபொருட்கள்
போன்றவை சுட்டப்படும். அவை பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்குப் பாடல்கள்
வழிச் சென்றடையும். இந்த மரபு மின்னணுத் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக
மிக வேகமாக மறைந்து வருகிறது.
4.3.3
எதிர்ப்பு குரல்
மக்களிடையே பொருளாதார
அடிப்படையிலும், சாதி
அடிப்படையிலும் ஏராளமான ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.
பொருளாதாரத்தில் சாதியிலும் உயர்ந்த தரத்தில் உள்ளவர்களின்
அடக்கு முறைகளுக்கு உட்படும் அடித்தள மக்கள் தங்களுடைய
உள்ளக் குமுறல்களை அவர்களிடம் நேரிடையாக வெளிப்படுத்த
இயலாத நிலை உள்ளது. இத்தகைய உள்ளத்து உணர்வுகளுக்கு
மிகச்சிறந்த வடிகாலாக நாட்டுப்புறப் பாடல்கள் விளங்குகின்றன.
தங்களுக்குள் பாடப்படும் பாடல்களில் தங்களுடைய உள்ளத்து
உணர்வுகளை வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ மக்கள்
வெளிப்படுத்துவதன் வாயிலாகத் தங்களுடைய மனக் குமுறலில்
இருந்து விடுபடுகிறார்கள். இவ்வகையில் நாட்டுப்புறப்
பாடல்களின் பங்களிப்பு மிகச்சிறந்தது என்பதில் ஐயமில்லை.
அறுவடையின்
போது நல்ல நெல்லைத் தாங்கள் எடுத்துக் கொண்டு கருக்காய் நெல்லை (முற்றாமல்
உலர்ந்து கருமை நிற அரிசியையுடைய நெல்) கூலிவேலை செய்பவர்களுக்குத்
தருவர். பண்ணை முதலாளிகள் வேலை செய்து கூலி கேட்டால் வெள்ளிக் கிழமை,
செவ்வாய்க் கிழமை என்று காரணம் காட்டிக் கூலி கொடுக்காமல் இழுத்தடிப்பர்.
அந்தக் கூலி வேலை செய்யும் பெண்களை ’வாடி போடி’ என்று மரியாதையில்லாமல்
அழைப்பர். இப்போக்கினை எதிர்த்துப் பேச இயலாத நிலை அடித்தட்டு மக்களுக்கு
இருக்கும். இத்தகையப் போக்குகளை எதிர்க்கும் எதிர்ப்புக் குரலாக அவர்களின்
பாடல்கள் காணப்படும். பின்வரும் பாடலைச் சான்றாகக் கூறலாம்.
|