தமிழ் மரபுத் தொடர்களுக்கும் பழமொழிக்கும் சில நிலையில் ஒற்றுமையும்,
பல நிலையில் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. அதைப்போல விடுகதைகளுடன்
தொடர்பும் வேறுபாடும் உள்ளது.
5.4.1
பழமொழியும் மரபுத் தொடரும்
தற்காலத் தமிழ் மரபுத் தொடர் அகராதியின்
முதன்மை ஆசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் பழமொழிக்கும் மரபுத் தொடருக்கும்
உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பின்வருமாறு விளக்கியுள்ளார். பழமொழியும்
மரபுத் தொடரும் வேறானவை. சில மரபுத் தொடர்கள் பழமொழியோடு தொடர்புடையன.
பழமொழிக்கும் மரபுத் தொடருக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. பழமொழியில்
உள்ள சொற்களின் நேர் பொருள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு விளக்கிக் கொள்ளப்படும்.
பழமொழி பல சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படக் கூடியது.
சட்டியில்
இருந்தால் தானே அகப்பையில் வரும்
என்ற பழமொழிக்கு கம்பி
நீட்டு என்ற மரபுத் தொடரின் பொருள் போல் ஒரே பொருள் கூற முடியாது.
ஒரு பழமொழியின் குறுகிய வடிவம் மரபுத் தொடராக மாறலாம்.
|