பாடம் - 5

A06135 பழமொழிகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

E

இந்தப் பாடம் பழமொழி என்றால் என்ன என்பதை விளக்குகிறது. பழமொழியின் இயல்புகள், சேகரிப்பு, பதிப்பு முதலியவை பற்றியும் குறிப்பிடுகிறது.

பழமொழியின் பயன்களையும், அவை எவ்வாறு தமிழர்களின் அறிவுத் திறன்களை வெளிப்படுத்துகின்றன என்பவற்றையும் எடுத்துரைக்கிறது.

பழமொழிகள் எவ்வாறு மரபுத் தொடருடனும் விடுகதைகளுடனும் தொடர்புகொண்டுள்ளன என்பதையும் சுட்டுகின்றன.

பழமொழியின் வாயிலாக வெளியாகும் கதைகளைப் பற்றிய செய்திகளையும் கூறுகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இப்பாடத்தை நீங்கள் படித்து இதில் உள்ள கற்றல் செய்கைகளை முழுமையாகச் செய்வீர்களேயானால் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்:

  • பழமொழிகள் வரையறையையும் இயல்புகளையும் அறிய இயலும்.
  • தமிழ்ப் பழமொழிகளின் சேகரிப்பு, பதிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளையும் அறிய இயலும்.
  • பழமொழிகளின் பயன்பாடுகள் குறித்து நடைமுறைச் சான்றுகளோடு பட்டியல் இட இயலும்.
  • பழமொழிகள் வெளிப்படுத்தும் தமிழர் தம் அறிவுத் திறன்களை நன்கு இனங்காண முடியும்.
  • பழமொழி மரபுத் தொடரோடும் விடுகதையோடும் கதையோடும் எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கிறது என்பதையும் அறிய இயலும்.

பாட அமைப்பு