நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் நகைச்சுவைத்
துணுக்குகள்
சிறந்த இடத்தைப் பெறுகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள்,
கதைகள், விடுகதைகள், பழமொழிகள், கதைப்பாடல்கள் போன்ற
இலக்கிய வகைகளுக்குத் தந்த முக்கியத்துவத்தை ஆய்வாளர்கள்
நகைச்சுவைத் துணுக்குகளுக்குத் தரவில்லை. இவற்றைச்
சேகரித்து ஆராய யாரும் முயலவில்லை. இன்றைய நிலையில்
ஏராளமான இதழ்களில் நகைச்சுவைத்
துணுக்குகள்
வெளியிடப்படுகின்றன. ‘கடி ஜோக்குகள்’ என்ற பெயரில்
ஏராளமான நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இவையனைத்தும் எழுத்திலக்கியவாதிகளின் படைப்பிலக்கியங்கள்.
ஆனால் நகைச்சுவைத் துணுக்குகள் மக்களால் உருவாக்கப்பட்டு
மக்களிடையே வாய்மொழியாக வழங்கப்பட்டு வருபவை. சில
நேரங்களில் வாய்மொழியாக வழங்கப்படும் நகைச்சுவைத்
துணுக்குகளைப் பத்திரிகைகள் வெளியிடுவதும், பத்திரிகைகளில்
வெளிவந்த நகைச்சுவைத் துணுக்குகள் மக்களிடையே பரவிப்
பல்வேறு வடிவங்களைப் பெற்று வாய்மொழி வழக்காறாக
உருமாறுவதும் உண்டு. இத்தகைய நகைச்சுவைகள், மக்களின்
இயல்புகளைப் புரிந்து கொள்ளவும்.
அவர்களின்
கருத்தோட்டங்களை அல்லது பண்பு நலன்களை அறிந்து
கொள்ளவும் உதவுகின்றன. இப்பாடத்தில் நகைச்சுவைத்
துணுக்குகள் குறித்துச் சுருக்கமாக சில எடுத்துக்காட்டுகளுடன்
காணலாம்.
|