இங்குத் திருடன் தன்னுடைய சமயோசித புத்தி காரணமாகத்
தோட்டக்காரரிடமிருந்து தப்பிப்பதை அறிய முடிகிறது.
6.3.3
மூடன்
“ஆடு மேய்ப்பவன் ஒருவன் ஆட்டுக் குட்டியைத்
தோளில்
போட்டுக் கொண்டு அதனைக் காணவில்லை என்று பல
இடங்களிலும் தேடினான். எங்கும் கிடைக்கவில்லை. பக்கத்தில்
இருந்த கிணற்றில் இருக்கிறதா? என்று கிணற்றினுள் எட்டிப்
பார்த்தான். அவன் தோளில் இருந்த ஆட்டுக்குட்டி கிணற்று
நீரில் தெரிந்தது. உடனே அவன் கிணற்றில் குதித்து ஆட்டுக்
குட்டியைத் தூக்கி வந்தான்”.
6.3.4
அறிவுரை
சில நகைச்சுவைத் துணுக்குகள் அறிவுரை கூறுவதற்காகத்
தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. வகுப்பறையில்
கவனத்துடன் ஆசிரியர் நடத்தும் பாடங்களைக் கவனிக்காத
மாணவனை இடித்துரைத்துத் திருத்துவதற்குப் பின் வரும்
துணுக்கு அடிக்கடி கூறப்படுவதுண்டு.
“ஓர்
ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
ஒரு மாணவன் பாடத்தைக் கவனிக்காமல் வகுப்பறையின்
ஓரத்தில் ஓடிக்கொண்டிருந்த எலியையே கவனித்துக்
கொண்டிருந்தான். அந்த எலி ஒரு வளையில் நுழைந்தது. அதன்
வால் பகுதி மட்டும் உள்ளே நுழையாமல் வெளியே
நீட்டிக்கொண்டிருந்தது. இந்நிலையில் ஆசிரியர் அந்த
மாணவனைப் பார்த்து ‘நான் நடத்தியது உன் மூளையில்
நுழைந்ததா?‘ என்ற பொருளில் சுருக்கமாக ‘என்னடா
நுழைந்ததா? என்று கேட்டார். எலியையே பார்த்துக்
கொண்டிருந்த மாணவன் சட்டென்று ‘எல்லாம் நுழைந்தது.
இன்னும் வால் மட்டும் நுழையவில்லை ஐயா என்றான்”.
இந்த நகைச்சுவைத் துணுக்கு வகுப்பறையில் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கையிலும்
சொல்லிக் கொடுப்பதைக் காதில் வாங்கிக் கொள்ளாத மாணவர்களை இடிந்துரைப்பதற்காகப்
பயன்படுத்தப்படுகிறது.
6.3.5
பேராசை
பகற் கனவு கண்டு, தான் மணந்து கொண்டதாகக்
கற்பனை
செய்துகொண்ட அரசன் மகளை உதைப்பதாக நினைத்துக்
கொண்டு தான் விற்கும் கண்ணாடிப் பாத்திரங்களை உதைத்து
உடைத்தவன் அல்நாசர். அந்தக் கதையின் சாயல் படிந்த
கதைகள் பல தமிழ் நாட்டுப் புறங்களில் வழங்குகின்றன.
பரண்மேலிருந்து காவல் செய்யும் பார்வையற்றவன் ஒருவன்,
பகற்கனவில் தனக்குத் திருமணமாகிவிட்டதாகக் காண்கிறான்.
மணப்பெண்ணோடு நெருங்கி உட்கார்கிறான். அவள்
கூச்சப்பட்டு நகர நகர.. அவன் நெருங்க நெருங்க..
பரண்மீதிருந்து விழுந்து கைகால்களை ஒடித்துக்கொள்ளும்
நடப்பியலில் பகற்கனவு முடிவடைகிறது.
6.3.6
பொய்
மற்றவர்களிடம் மட்டுமல்லாது தங்களுக்குள்ளேயே
கூடத்
தயக்கமில்லாமல் பொய்கள் சொல்லும் குடும்பம் பற்றி ஒரு கதை
உண்டு. அப்பனும் மகனும்
(4, 5 வயது)
போய்க்கொண்டிருந்தார்கள். அப்பன் ‘அந்தா பாற்றா,
மலையிலே ஒரு சித்தெறும்பு போற அளகை’ என்றான்.
பையனும் கூர்ந்து கவனித்துவிட்டுச் சொன்னான்; ‘ஆமாப்பா,
சித்தெறும்புக்குப் பின்னாடி அதோட குட்டியும் போகுதே,
பார்த்தியா, என்ன சோக்காப் போகுது!’ என்றான். அப்புறம்
பையன் சொன்னான்: ஒருநாள் பண்ணையார் வீட்டிலே
தென்னை மரத்திலே ஏறி உச்சிக்குப் போயிட்டேன்’ அப்பன்
கேட்டான்: ‘அப்புறம் எப்படிடா மகனே எறன்குனே’ பையன்
பதில் சொன்னான்: ‘பொறவு சடார்னு ஒரு யோசனை வந்தது.
பட்டுனு ஒரு ஏணியை எடுத்து வச்சு மளமளன்னு
எறங்கிவந்துட்டேன்’.
பொய்
சொல்பவர்களை எள்ளிப் பேச இதுபோன்ற துணுக்குக்
கதைகள் பிறந்து வழங்கின.
|