| இந்தப்
பாடம் நகைச்சுவைப் பாடல்கள் என்றால் என்ன என்பதை
விளக்குகிறது. நகைச்சுவைக் கதைகளை எவ்வாறு கதை சொல்பவர்
தொடங்குகிறார், குறிப்பிட்ட ஊர் மக்களைப் பற்றி
எவ்வாறு நகைச்சுவைக் கதைகள் சொல்லப்படுகின்றன என்பவற்றையும்
தெரிவிக்கிறது. வாய்
மொழியாக நாட்டுப்புறங்களில் வழங்கிவரும் நகைச்சுவைக்
கதைகளும், துணுக்குகளும் எவ்வாறு உருவாகின என்பதை
இப்பாடம் விளக்குகிறது.
தொழில்
தொடர்பான நகைச்சுவைக் கதை பற்றிக் கூறுகிறது. சமயோசிதம்,
விருந்து, மூடன், அறிவுரை, பேராசை. பொய் ஆகியவற்றை
பற்றிக் கூறப்படும் நகைச்சுவைத் துணுக்குக் கதைகளைப்
பற்றியும் கூறுகிறது. |