தன் மதிப்பீடு : விடைகள் - II

2. விருந்தோம்பலில் நாட்டுப்புற நகைச்சுவை இடம்பெறும் விதம் யாது?

நடப்பியலில் ஏழ்மை நிலையில் உள்ள நாட்டுப்புற மக்கள் ஆர்வமாக விருந்தோம்ப முடியாமல் போகலாம். இதனைச் சுட்டிக் காட்டும் விதமாக விருந்தினர்களிடமிருந்து அவர்கள் தப்பிக்க முயல்வது போன்ற நகைச்சுவைக் கதைகள் அமைகின்றன.