2.2 சிறுதெய்வம் - பெருந்தெய்வம் |
||||||||||||||||||||||||||||||||
சிறுதெய்வம் என்று சொல்லும் பொழுதே பெருந்தெய்வம் என்ற ஒன்றும் இருப்பதாகக் கருத்து அமைவது தவிர்க்க இயலாததாகும். மனித சமூகத்தில் உயர்வு, தாழ்வு என்ற பாகுபாடு தோன்றி வளர்ந்துள்ளதைப் போலவே, மனிதப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வழிபாட்டிலும் பெருந்தெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு என்ற பாகுபாடு நிலவி வருகிறது. சமூகத்தின் அடித்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் சிறுதெய்வங்களாகவும், மேல்தட்டு மக்களால் வழிபடப்படும் தெய்வங்கள் பெருந்தெய்வங்களாகவும் தனித்தனியே வணங்கப்பட்டு வருகின்றன. |
||||||||||||||||||||||||||||||||
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக |
||||||||||||||||||||||||||||||||
நாட்டுப்புற மக்கள் சிறுதெய்வங்களை மட்டுமல்லாது சிவபெருமான், திருமால், முருகன், விநாயகர், பார்வதி, மீனாட்சி, காமாட்சி போன்ற பெருந்தெய்வங்களையும் வழிபட்டு வருகின்றனர். இருப்பினும் சிறுதெய்வங்கள், பெருந்தெய்வங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் மிகுதி, இந்த அட்டவணையைப் பாருங்கள், உங்களுக்குப் புரியும். |
||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக |
||||||||||||||||||||||||||||||||
சிறுதெய்வங்களுக்கும் பெருந்தெய்வங்களுக்கும் இருப்பிடம், உருவ அமைப்பு, கோயில் அமைப்பு, வழிபாட்டு முறை, விழாக்கள், நேர்த்திக் கடன் போன்றவற்றில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. இதை நீங்களும் நன்கு அறிவீர்கள். |