2.7 தொகுப்புரை

‘நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையில், பிரிக்க முடியாத கூறாக, ஆழமாக வேரூன்றிப் பரவியுள்ள, தெய்வ வழிபாடுகளும் விழாக்களும், நாட்டுப்புறப் பண்பாட்டைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன’ என்பதை மேற்கண்ட விளக்கங்களின் வழி அறியலாம். மேலும், மனித சமூகத்தை ஒருங்கிணைத்து நெறிப்படுத்துவதிலும் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதையும் உணரலாம். வழிபாடும் விழாக்களும் மக்களிடையே பக்தியுணர்வைப் பெருக்கி நல்லொழுக்கத்தை வளர்த்து வருகின்றன என்பதை மறுக்க இயலாது.

தமிழர் பண்பாட்டை, வழிபாடு மற்றும் விழாக்களின் வழி மட்டுமே விளங்கிக் கொள்ள முடியும் என்னும் அளவிற்கு இவை பண்பாட்டுக் கருவூலமாய்த் திகழ்கின்றன.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1.

அய்யனார் வழிபாட்டின்போது செலுத்தப்படும் முக்கியக் காணிக்கைப் பொருள் யாது?

விடை
2.

பெரிய கும்பிடு என்பதன் வேறு பெயர்களைக் குறிப்பிடுக.

விடை
3.

அமுது படையல் விழா எவரின் நினைவாக நிகழ்த்தப்படுகிறது?

விடை
4.

பொங்கல் திருவிழாவின் நான்கு நாள் நிகழ்வுகள் எவை?

விடை
5.

சித்திரைத் திருவிழா நடைபெறும் ஊர் எது?

விடை