பாடம் - 2

A06142 வழிபாடுகளும், விழாக்களும்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழக நாட்டுப்புற மக்கள் வழிபடும் தெய்வங்களையும் வழிபாட்டு மரபுகளையும் எடுத்துரைக்கிறது. சிறுதெய்வ மரபு, பெருந்தெய்வ மரபு இவற்றிற்கு இடையிலான வேறுபாடுகளைத் தெளிவுபடுத்துகிறது. சிறுதெய்வங்களை ஆண், பெண் தெய்வங்களாக வகைப்படுத்தி, அவற்றின் வழிபாட்டு முறைகளை விளக்கி உரைக்கிறது. நாட்டுப்புற வழிபாடு மற்றும் விழாக்களின் வழி வெளிப்படும் தமிழர் பண்பாட்டையும், வழிபாடுகளில் நிகழ்ந்துவரும் மாற்றங்களையும் எடுத்துச் சொல்கிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

தமிழரின் பழமையான வழிபாட்டு மரபைத் தெரிந்து கொள்ளலாம்.

சிறுதெய்வ மரபு, பெருந்தெய்வ மரபு குறித்துத் தெளிவு பெறலாம்.

ஆண், பெண் தெய்வங்கள் குறித்த நாட்டுப்புற மக்களின் கருத்தாக்கங்களை அறிந்து கொள்ளலாம்.

வழிபாடுகளில் நிகழும் சடங்குகள், நேர்த்திக் கடன்கள் எவை என்று தெரிந்து கொள்ளலாம்.

வழிபாடுகளும் விழாக்களும் நாட்டுப்புற மக்களை எங்ஙனம் ஒன்றிணைக்கின்றன, வழி நடத்துகின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

வழிபாடுகள், விழாக்களின் வழித் தமிழர் பண்பாடு கட்டமைக்கப்பட்டுள்ள விதத்தினைப் புரிந்து கொள்ளலாம்.