மரக்கட்டைகளைக்
காலில் கட்டிக்கொண்டு, துணிகள்,
காகிதங்களால்
செய்யப்பட்ட குதிரைக்
கூட்டைத் தோளில் சுமந்து
கொண்டு
நையாண்டி மேளத்தின்
இசைக்கேற்ப ஆடப்படுவது பொய்க்கால்
குதிரையாட்டம் ஆகும். இராஜா, இராணிபோல்
வேடமணிந்து நேராக,
வட்டமாக, குறுக்காக
நடந்தும் குதிரைக்கூட்டை மேலும்
கீழும்
அசைத்தும் இசைக்குத் தகுந்தவாறு ஆட்டம்
அமையும். கரகாட்டத்தின்
துணை ஆட்டமாகவே பொய்க்கால் குதிரை
ஆட்டம் ஆடப்படுகிறது.
|