வடஆர்க்காடு,
தென்ஆர்க்காடு, தருமபுரி,
செங்கல்பட்டு
மாவட்டங்களில் நடைபெறும் அம்மன்
விழாக்களில் கைச்சிலம்பாட்டம்
நிகழ்த்தப்படுகின்றது. பாடல்,
இசை, ஆட்டம் என்று மாறிமாறி
இக்கூத்து நிகழ்த்தப்படும். தெய்வங்கள்
தொடர்பான கதைப் பாடல்கள்
மிகுதியாக இடம்பெறுகின்றன.
கோயிலின் முன்பாக
விடியவிடிய
ஆட்டம், நிகழ்த்திக் காட்டப்படுகின்றது.
|