5.2 நாட்டுப்புற விளையாட்டுகள் - வகைப்பாடு

நாட்டுப்புற விளையாட்டுகளை வகைப்படுத்தி விளக்குவது விளையாட்டுகளின் தன்மையை உணர்ந்து கொள்வதற்குத் துணை செய்யும். உடல் திறனையும் அறிவுத் திறனையும் ஒருசேர ஆக்கமுறச் செய்யும் ஊக்க சக்தி உடையவைகளாக விளையாட்டுகள் விளங்குகின்றன. இவை காலம், களம், பங்கு பெறுவோர், பால், வயது, பாடல், தன்மை, போட்டி, வரைபடம் என்று பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தும் அளவிற்கு விரிந்த பரப்பைக் கொண்டவையாக உள்ளன.

விளையாட்டுகள் கீழ்க்காணும் அடிப்படைகளில் வகைப்படுத்தப் படுகின்றன.

கால அடிப்படை

* வேனிற் காலம்                       * மழைக் காலம்

 

* வேனிற் கால விளையாட்டுகள்:

புளியங் கொட்டை விளையாட்டுகள், கிட்டிப் புள், பச்சைக் குதிரை, பந்து, கபடி, காற்றாடி, கள்ளன்-போலீஸ், கண்ணாமூச்சி, எலியும் பூனையும், பூசணிக்காய் விளையாட்டு, பல்லாங்குழி, தாயம், பம்பரம், கும்மி, கோலாட்டம்.

* மழைக் கால விளையாட்டுகள்:

பல்லாங்குழி, தாயம், தட்டா மாலை, ஆடுபுலி ஆட்டம், சில்லுக் கோடு, கொழுக்கட்டை.

ஆடுகளம்

* வீட்டிற்கு உள்ளே (அக விளையாட்டுகள்)

வீட்டிற்கு வெளியே (புற விளையாட்டுகள்)

* பல்லாங்குழி, தாயம், தட்டா மாலை, ஒத்தையா? ரெட்டையா?, கரகர வண்டி, ஆடுபுலி ஆட்டம், கொழுக்கட்டை ஆகியவை அக விளையாட்டுகள்.

பம்பரம், கிட்டிப் புள், கபடி, சில்லுக் கோடு, பந்து, காற்றாடி, கள்ளன்-போலீஸ், பச்சைக் குதிரை, கும்மி, கோலாட்டம் ஆகியவை புற விளையாட்டுகள்.

கருவிகள்

ஒரு கருவி

ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகள்

பம்பரம், பந்து, பட்டம், காற்றாடி, சில்லுக் கோடு, ஒத்தையா? ரெட்டையா?, தட்டா மாலை,

கிட்டிப் புள், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், உறியடி, தாயம், நொண்டி கோலாட்டம்.

பங்குபெறுவோர்

தனி நபர்

இருவர்

குழு

சீதைப் பாண்டி, பட்டம், காற்றாடி, கரகர வண்டி.

பல்லாங்குழி, தாயம், பிஸ்ஸாலே, சில்லுக் கோடு, ஆடுபுலி ஆட்டம், கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், ஒத்தையா? ரெட்டையா?, கொழுக்கட்டை.

பச்சைக் குதிரை, பம்பரம், கபடி, கண்ணாமூச்சி, பூசணிக்காய், எலியும் பூனையும், ஒருகுடம் தண்ணி ஊத்தி, குலைகுலையா முந்திரிக்காய், கள்ளன்-போலீஸ், எறிபந்து, கும்மி, கோலாட்டம், சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம்.

பால் மற்றும் வயது

ஆண்கள்

இருபாலர்

பெண்கள்

* சிறுவர்

சிறுமியர்

ஆடுபுலி ஆட்டம், கபடி, சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம், சிலம்பாட்டம், வண்டிப் பந்தயம்.

பல்லாங்குழி, தாயம், சில்லுக் கோடு, தட்டா மாலை, கும்மி, கோலாட்டம், பாண்டி.

* கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை, பந்து, பச்சைக் குதிரை, பம்பரம், புளியங் கொட்டை, கபடி, கள்ளன் போலீஸ்.

கண்ணா மூச்சி, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், எலியும் பூனையும், ஒரு குடம் தண்ணி ஊத்தி.

கரகர வண்டி, சில்லுக் கோடு, பூப்பறிக்க வருகிறோம், கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், பல்லாங்குழி, கொழுக்கட்டை, நொண்டி.

பாடல்

பாடல் உள்ளவை

பாடல் இல்லாதவை

ஒரு குடம் தண்ணி ஊத்தி, பூப்பறிக்க வருகிறோம், குலைகுலையா முந்திரிக்காய், பிஸ்ஸாலே, கண்ணா மூச்சி, கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், கபடி, கொழுக்கட்டை, கும்மி, கோலாட்டம்.

பல்லாங்குழி, தாயம், ஒத்தையா? ரெட்டையா?, ஆடுபுலி ஆட்டம், சல்லிக்கட்டு, உறியடி, வழுக்கு மரம்.

திறன்

உடல் திறன்

அறிவுத்திறன்

வீர விளையாட்டு

கபடி, சிலம்பாட்டம், உறியடி, வழுக்கு மரம், இளவட்டக் கல், பச்சைக் குதிரை, கும்மி, கோலாட்டம்.

பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம்

சல்லிக் கட்டு.

செயல்கள்

ஓடுதல்

பிடித்தல்

தொடுதல்

ஒளிதல்

தேடுதல்

கண்டு பிடித்தல்

 

பந்து, கிட்டிப்புள், கள்ளன்-போலீஸ்

கள்ளன்-போலீஸ், எலியும் பூனையும், நொண்டி, கபடி.

கண்ணா மூச்சி, கள்ளன்-போலீஸ், கபடி, நொண்டி.

கள்ளன்-போலீஸ், கண்ணா மூச்சி

கள்ளன்-போலீஸ், எறிபந்து, கிச்சுக் கிச்சுத் தாம்பாளம்

கண்ணா மூச்சி, கள்ளன்-போலீஸ்

வரைபடம்

* வரைபடம் உள்ளவை

வரைபடம் இல்லாதவை

* தாயம், ஆடுபுலி ஆட்டம், சில்லுக் கோடு, நொண்டி, கபடி.

பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், கண்ணா மூச்சி, பச்சைக் குதிரை, சல்லிக் கட்டு, உறியடி.

மேற்கூறிய வகைப்பாடுகள் அன்றி நேரம், நடுவர், பார்வையாளர், உடல் உறுப்பு என்ற முறையிலும் பலவாறு வகைப்படுத்தலாம்.

நாட்டுப்புற விளையாட்டுகளை எவ்வாறு வகைப்படுத்தினாலும் விளையாட்டின் முக்கியக் கூறுகளான உடல் திறனும் அறிவுத் திறனும் அனைத்து விளையாட்டுகளிலும் இடம்பெற்று இருப்பதைக் காணலாம்.